(எம்.எம்.மின்ஹாஜ்)

போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாமல் செய்வதற்கு இந்து சமுத்திர வலய நாடுகளுடன் கூட்டு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளோம். இதற்கு ஏற்றால் போன்று புதிய வேலைத்திட்டங்கள் இலங்கையினால் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டளவில் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே எமது இலக்காகும் என  சட்டம் , ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

போதைபொருள் முற்றாக ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.