(எம்.ஆர்.எம்.வஸீம்)

அப்பாவி மக்களை கொலை செய்யும் இவ்வாறான மிளேச்சத்தனமான தாக்குதல்களை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேக் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாசபை மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஹோட்டல்களிலும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் அதில் பாதிக்கப்பட்டு உயிரிந்தவர்களின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிகின்றோம். அத்துடன் காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.