(ப. பன்னீர்செல்வம்)

அமெரிக்காவில் வைத்து கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டாலோ அல்லது விசாரிக்கப்பட்டாலோ அது இலங்கையில் தனித் தமிழீழம் அமைவதற்கான சம்பந்தன், விக்னேஸ்வரன், புலம்பெயர் புலிகளுக்கு கிடைக்கும் வெற்றியாகும் எனத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், சமஷ்டி ஆசையை காட்டி தமிழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி சிங்கள மக்களை தூண்டிவிடுவதே சம்பந்தனின் நிகழ்ச்சி நிரலாகும் என்றும் அவ்வியக்கம் தெரிவித்தது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்;

கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜையாகும். எனவே தான் விடுதலைப் புலிகள் சார்பு, புலம்பெயர் அமைப்புக்கள் அவரை கைது செய்யுமாறு ஒபாமாவிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளன.

இதன் அடிப்படையில் கோத்தபய ராஜபக் ஷ  கைது செய்யப்பட்டாலோ அல்லது அமெரிக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாலோ அது இலங்கையில் தனித் தமிழீழத்தை அமைப்பதற்கு முயற்சிக்கும் சம்பந்தன், விக்கினேஸ்வரன் புலம்பெயர் புலிகளுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாகும்.