மொனாக்கோவில் நடைபெற்ற மான்ட்கார்லோ டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் துசான் லாஜோவிச்சை வீழ்த்தி இத்தாலி வீரர் பாபியோ போக்னினி சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அரையிறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீரர் நடாலை வென்று இறுதிச் சுற்றில் நுழைந்த பேக்கினினி, நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் டுஸான் லஜோவிக்கை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சம்பயின் கிண்ணத்தை கைப்பற்றினார்.

ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் கிண்ணத்தை இத்தாலி வீரர் வெல்வது இதுவே முதல் முறை என்பதுடன், இந்த வெற்றியின் மூலம் 31 வயதான போக்னினி புதிய டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 12 வது இடத்துக்கு முன்னேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.