கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர்  வெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் வாழைமரம் நட்டு வெள்ளைக் கொடி கட்டி துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசதங்களில் வர்த்தாக நிலைங்கள் பூட்டப்பட்டு வெள்ளளைக் கொடி கட்டப்பட்டிருந்தன. அரச அலுவலகங்கள் அரச மற்றும் தனியார் வங்கிகள் இயங்கவில்லை 

போக்குவரத்து நடைபெற்ற போதிலும் பொதுக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டத்தில் பல இடங்களில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..