(ப.பன்னீர்செல்வம்)

யோஷித்த ராஜபக்ஷ தொடர்பில் கடற்படை தளபதிக்கு வழங்கப்பட்ட விசாரணை அறிக்கை ஆராயப்பட்டு அந்த விடயத்தின் எதிர்கால நடவடிக்கைகளை வெளியிடுவோம் எனத் தெரிவித்த பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் பரிகேயர் ஜயநாத் ஜயவீர, இது தொடர்பில் கடற்படை தளபதியை சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்  அந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பரிகேடியர் ஜயவீர இவ்வாறு கூறினார். 

ஊடகவியலாளர் தனது கேள்வியில் யோஷித ராஜபக்ஷ கடற்படையில் அதிகாரியாக சேவையாற்றுகையில் கடற்படை சட்டங்களை மீறி செயற்பட்டதாகவும், பயிற்சிகள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதனை விவாதிப்பதற்காக விசேட குழு அமைக்கப்பட்டதோடு, யோஷித்த கடற்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். 

இந்நிலையில் இது தொடர்பான அறிக்கை கடற்படை தளபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் யோஷித்த மனித உரிமைகளை மீறியுள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இது தொடர்பில் எதிர்காலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகின்றீர்கள் என்றும் கேள்வியெழுப்பினர். 

இதற்குப் பதிலளிக்கையிலேயே பாதுகாப்பு தரப்பு ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜலாத் ஜயவீர, இந்த விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லையெனவும், எதிர்வரும் நாட்களில் கடற்படை தளபதியை சந்தித்து இது தொடர்பில் கேட்டறிந்து தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பதாகவும் அறிவித்தார்.