நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்வரும் முதலாம் திகதி ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மே தினக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை அக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியினர் மே தினக் கூட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பு மாநகர சபை மைதானத்தில் அனுஷ்டிக்க நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.