யாழ்.மத்திய பஸ் நிலையம் உட்பட்ட பல பகுதிகளில் பெருமளவான பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மத்திய பஸ் நிலையத்திற்கு செல்லும் சந்தேகத்திற்கு இடமானவர்களை அதிரடி படையினர் விசாரணை செய்வதுடன் , சந்தேகத்திற்கு இடமான பொதிகளையும் பரிசோதனை செய்கின்றார்கள். 

இதேவேளை யாழ்.புறநகர் பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் , மற்றும் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்கள் என்பவற்றுக்கு அருகிலும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.