(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு  உட்பட  நீர்கொழும்பு பகுதியில் நேற்று  மேற்கொள்ளப்பட்ட 08 தொடர் குண்டு வெடிப்பு  தாக்குதல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற  வேண்டும் என எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

குண்டு தாக்குதல் தொடர்பில் முன்கூட்டிய  அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும் பாதுகாப்பு தரப்பு ஏன்   கவனம்  செலுத்தவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க  பிறரை  சுட்டிக்காட்ட  முடியாது.  அரசாங்கத்தின் பொறுப்பற்ற  நிர்வாகத்தினாலே  290 ற்கும் மேற்பட்ட உயிர்கள்  பலியாகியுள்ளன.  ஆகையால்  உடனடியாக  பிரதமர்  பதவி விலக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.