நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக பல்கலைக்கழகங்களின் கல்வி சார் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிகள் தொடர்ந்தும் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் ஊழியர்கள் அனைவரையும்  நாளை 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்புமாறு துணைவேந்தர் அறிவுறித்துள்ளார்,  

இதனையடுத்து பணிகள் யாவும் வழமைபோல இடம்பெறும் எனவும் யாழ். பல்கலைக்கழகப் பதிவாளர் வீ. காண்டீபன் அறிவித்துள்ளார்.