நீர்கொழும்பு - குளியாப்பிட்டிய வீதியின் கொட்டறமுல்ல பகுதியில் காரொன்று மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், காரின் சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.