சென்னை அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் ஓட்டங்களை 161 குவித்துள்ளது.

ஐ.பி.எல்.தொடரின் 39 ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணியின் தலைவர் தோனி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை குவித்தது.

பெங்களூரு அணி சார்பில் பார்த்தீவ் பட்டேல் 53 ஓட்டத்துடனும், விராட் கோலி 9 ஓட்டத்துடனும், வில்லியர்ஸ் 25 ஓட்டத்துடனும், அக்சீப் நாத் 24 ஓட்டத்துடனும், ஸ்டோனிஸ் 14 ஓட்டத்துடனும், புவான் நிகி 5 ஓட்டத்துடனும், மொய்ன் அலி 26 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க ஆடுகளத்தில் உமேஷ் யாதவ் ஒரு ஓட்டத்துடனும் ஸ்டெய்ன் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் ஜடேஜா தீபக் சாஹர் மற்றும் பிராவோ தலா 2 விக்கெட்டுக்களையும்,  இம்ரான் தாகீர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

இதன் மூலம் சென்னை அணியின் வெற்றியிலக்கு 162 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

நன்றி ; ஐ.பி.எல். இணையத்தளம்