(இராஜதுறை ஹஷான்)

கத்தோலிக்க மதத்தவர்களில் விஷேட தினமான உயிர்த்த ஞாயிறு ஆராதனை இடம் பெற்றக் கொண்டிருந்த வேலை காலை 8.30 - 9.00 மணிக்கிடையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தற்கொலை தாக்குதல்தாரியினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தினடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

செபஸ்தியன் தேவாலய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு பலர் படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் நீர்கொழும்பு சிக்ஷன் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலும் பலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது தேவாலயத்தில் பெரிதாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்பட்டிருக்காமயில் பொது மக்கள் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

எனினும் சம்பவம் நடைபெற்று சிறிது நேரத்தில் பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொடர்ந்து பல மணித்தியாலங்களின் பின்னர் சம்பவத்திற்கு முகங்கொடுத்தவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அதனை பார்வையிட வந்த பொது மக்கள் திருப்பி அனுப்பட்டதோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

நேற்று மாலை 3.30 மணியளவில் மாலை 6 மணி முதல் முழுநாட்டுக்கும் ஊரடங்கு சட்டம் பிரபிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தாலும்  நிலைமையை கருத்திற் கொண்டு உடனடியாக அமுல்படுத்தப்பட்டது.