தேவாலயம், ஹோட்டல்கள் உள்ளிட்ட இலங்கையின் பல இடங்களில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஒரு புனித நாளிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை தனக்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.