(நா.தினுஷா)

நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களினால் உயிர் இழந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு இதுபோன்ற நெருக்கடி நிலையில் அமைதியை சமாதானத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 

குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.