12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 38 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 159 குவித்துள்ளது.

ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐதராபாத் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து ஓட்டங்களை 159 குவித்துள்ளது.

கொல்கத்த அணி சார்பில் கிறிஸ் லின் 51 ஓட்டத்தையும், சுனில் நரேன் 21 ஓட்டத்தையும், சுப்மான் கில் 3 ஓட்டத்தையும், நிட்டிஸ் ரான 11 ஓட்டத்தையும், தினேஸ் கார்த்திக் 6 ஓட்டத்தையும், ரிங்கு சிங் 30 ஓட்டத்தையும் ரஸல் 15 ஓட்டத்தையும், பியூஸ் சாவ்லா 4 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், கே.சி. காரியப்பா 9 ஓட்டத்துடனும், யர்ரா ப்ரித்விராஜ் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் ஐதராபாத் அணி சார்பில் கலீல் அஹமட் 3 விக்கெட்டுக்களையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுக்களையும், சண்டீப் சர்மா மற்றும் ரஷித் கான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

இதனால் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு ஓட்டம் 160 நிர்ணயிக்கப்பட்டது.

நன்றி ; ஐ.பி.எல். இணையத்தளம்