கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் இடம்பெற்ற மூன்று வெடிப்பு சம்பவங்களையடுத்து அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை தெமட்டகொடை மகவில பூங்கா பகுதியில் வெடிபொருட்களை மீட்கச் சென்ற வேளை நபர் ஒருவர் வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததில் மூன்று பொலிஸார் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.