மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை (21) காலை ஆராதனையின் போது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இதுவரையில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் அமைந்துள்ள பகுதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காணப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டக்கப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் காயப்பட்டவர்களுக்கு தீசிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை மட்டக்களப்பு பொதனை வைத்தியசாலை மக்களால் நிரம்பிக் காணப்படுவதோடு, காயப்பட்டவர்களுக்கு அவசரமாக இரத்தம் தேவையாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.