நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து அவசரமாக பாதுகாப்புச் சபை கூடுகின்றது.

நாட்டில் ஜனாதிபதி இல்லாத நிலையில் பிரதமர் தலைமையில் குறித்த பாதுகாப்புச் சபை அவசரமாக இன்று கூடுகின்றது. 

அத்துடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்தன உள்ளிட்ட சில அமைச்சர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அவசரமாக பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான அமைச்சரவையும் இன்று கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.