இலங்கையின் பல இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு ; 98 பேர் பலி , பலர் காயம் ; பலியானோரின் எண்ணிக்கை உயருமென அச்சம் !

Published By: Priyatharshan

21 Apr, 2019 | 11:25 AM
image

இலங்கையின் பல பாகங்களில் பாரிய குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 வெடிப்பு சம்பவங்களிலும் சுமார்  பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை இலங்கையின் 6 இடங்களில் பாரிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், 2. நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு, கட்டான தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார்  ஆலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி 160 க்கும் மேற்பட்டடோர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கொழும்பு கொச்சிக்கடையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதேவேளை, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04