கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில்  இடம்பெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பிரதமர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலும், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயத்திலும் இரு பாரிய குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன

இந்நிலையில் கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில்  ஏற்பட்ட வெடிப்பு தொடர்பில் பார்வையிட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொச்சிக்கடை தேவாயலத்திற்கு செல்லவுள்ளதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்