கிரிக்கெட் வீரர் குமார சங்கக்காரவின் கிரிக்கெட் வாழ்வை பின்பற்றி அரசியல் அரங்கில் தாமும் துடுப்பெடுத்தாடப்போவதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை, லுணுகம்வெஹர பிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கும், குமார சங்கக்கார மாதிரிக் கிராமத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு, உறையாற்றும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைவருக்கும் நிழல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் 2 ஆயிரத்து 126 ஆவது மாதிரிக் கிராமம் இதுவாகும். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவை கௌரவிக்கும் வகையில் இந்த மாதிரி கிராமம் அமைக்கப்படுகிறது என்றார்.

குடும்பத்த  உறுப்பினர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அன்றி பொதுமக்களை வலுப்படுத்துவதற்காகவே தாம் சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் கூறினார். .