ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐ.பி.எல். 12 ஆவது தொடரின் 36 ஆவது போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. ஆரம்ப ஆட்டக்காரர்களாக டி கொக்கும் ரோகித் சர்மாவும் களம் இறங்கினர்.
ரோகித் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ், டி கொக்குடன் ஜோடி சேர்ந்து ஆடினார்.
டிக் கொக் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். சூர்யகுமார் யாதவ் 34 ஓட்டங்ளைப்பெற்றிருந்த போது எதிர்பாராதவிதமாக பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த ஹர்திக் பாண்டியா, டி கொக்குடன் இணைந்து ஆடினார். அதிரடியாக ஆடிய டி கொக் 65 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது பிடிகொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 6 பவுண்டரியும், 2 சிக்சரும் அடித்தார். அதன் பின் வந்த பொல்லார்ட் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 161 ஓட்டங்களை எடுத்தது.
பின்னர் 162 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 162 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் அதிக பட்சமாக சாம்சன் 35 ஓட்டங்களையும் ரீயான் பராக் 43 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஸ்டீவன் ஸ்மித் 59 ஓட்டங்களைப்பெற்று இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
மும்பை பந்து வீச்சாளர்கள் தரப்பில் ராகுல் சாஹர் 3 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்டீவன் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM