பெரும்பாலான இளைய தலைமுறையினர் தண்ணீர் அருந்துவதில் முறையான விழிப்புணர்வை பெறாததால் சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு தற்போது மூன்று வகையினதான சத்திர சிகிச்சை நடைமுறையில் பலனளித்து வருகிறது. 

இதில் Percutaneous Nephrolithotomy என்ற சத்திர சிகிச்சையும் ஒன்று.

 “இத்தகைய சத்திர சிகிச்சை சிறுநீரக கல்லின் அளவு இரண்டு செ.மீக்கு மேல் இருக்கும் போதும் அல்லது அதன் அமைப்பு சீரற்றதாக  இருக்கும் போதும் பயன்படும். இதன் போது நாங்கள் கல் எங்கிருக்கிறதோ அதனருகே ஒரு துளையிட்டு அதனூடாக சிறுநீரக கற்களை முழுமையாகவும் துல்லியமாகவும் பார்ப்பார்கள். 

பிறகு அதனை உடைப்பதற்கான மின் காந்த அதிர்வலையை அனுப்பி அந்த கல்லை உடைப்பார்கள். பிறகு அந்த கற்களை நுண்துளையுடன் பொருத்தப்படும் மற்றொரு கருவியின் மூலமாக அதனை உறிஞ்சி அகற்றுவார்கள். 

இதற்காக நோயாளிகள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்தியசாலையில் தங்கவேண்டியதிருக்கும். அதன்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சத்திர சிகிச்சைக்கு தயார் படுத்துவார்கள். 

சிலருக்கு சத்திர சிகிச்சையின் போது இரத்த அழுத்தம் உயரக்கூடும்.அதனை கட்டுப்படுத்திக் கொண்டே இந்த சத்திரசிகிச்சையை செய்து கொண்டால் முழுமையான பலனை பெறலாம். 

இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சிறுநீரக கற்கள் உருவாகாமலிருக்க வேண்டுமானால் வைத்தியர்கள் சொல்லும் பரிந்துரைகளையும்இ வழிகாட்டல்களையும் உறுதியாக பின்பற்றவேண்டும்.”.

தொகுப்பு அனுஷா.