உலகிலேயே மிகவும் எடை குறைந்த உலோகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஸ்டைரோபோம(Styrofoam) என்ற உலோகத்தை விட 100 மடங்கு எடை குறைவானதாகும்

மைக்ரோலாட்டிஸ் (Microlattice) என அழைக்கப்படும் இந்த உலோகம்,  99.99 சதவீதம் காற்று நிரம்பிய, 100 நானோமீட்டர் தடிப்புடைய சிறிய உலோகக் குழாய்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இக்குழாய்கள் மனிதனின் தலைமுடியின் தடிப்பை விடவும் 1000 மடங்கு மெல்லியவை.

இந்த உலோகம் எதிர்காலத்தில் விமானங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படக்கூடும் என்று கருதப்படுகிறது.