இலங்கை தமிழரசுக் கட்சியின்  இளைஞரணி நிர்வாகத்தெரிவு மற்றும் மாநாடு இன்று வவுனியாவில் இடம்பெற்ற போது தமிழரசுக் கட்சியின் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டமையினால் சிறு குழப்பம் ஏற்பட்டது.

இளைஞரணி நிர்வாகத்தெரிவு இடம்பெறுவதற்கு முன்னர் கட்சியின் கொடி ஏற்றுவதற்காக அனைவரும் நிகழ்வு இடம்பெற்ற வவுனியா நகரசபையின் மண்டபத்திற்கு முன்பாக கூடியிருந்த நிலையில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவால் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த கட்சியின் கொடி தலைகீழாக காணப்பட்டமையை கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் கொடி இறக்கப்பட்டது. 

இதனையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அவ்விடத்திற்கு வந்து கொடியை சீர் செய்து கொடுத்திருந்த நிலையில் மீண்டும் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.