(ஆர்.விதுஷா)

கலேவலை இரட்டை கொலை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 15 ஆம் திகதி இரவு கலேவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவபுவ பகுதியை சேர்ந்த கணவன் மனைவி ஆகியோர் அடையாளம் தெரியாதோரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் உயிரிழந்த பெண்ணின் சகோதரர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்களில் ஒருவரான 53 வயதுடைய தேவபுவ பகுதியை சேர்ந்த அளுத் கெதர விமலசேன என்பவர் இன்று சனிக்கிழமையும், 61வயதுடைய அதே பகுதியை சேர்ந்த அளுத்கெதர ஜெனதாச என்பவர் நேற்று  வெள்ளிக்கிழமையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேக நபரான விமலசேனவிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 12 ரக துப்பாக்கியொன்றும் கத்தியொனறும் மீட்கப்பட்டுள்ளன.

53வயதுடைய காமினி சுரவீர மற்றும் 51வயதுடைய அனுலா சுரவீர ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் அனுலா சுரவீர கடந்த 2018ஆம் ஆண்டு உலக பெண்கள் தினத்தில் முன்மாதிரிகையான பெண்ணாக விருது வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கலேவல பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளக்கு அமையவே சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்படடுள்ளனர்.

மேலும்  சந்தேக நபர்களை தம்புள்ளை நீதவான் நீதிமன்றமத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார்  மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகளையம் முன்னெடுத்து வருகின்றனர்.