(ஆர்.விதுஷா)

கொத்மலை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இன்று  இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதெ குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 38 வயதுடைய உடஹேன தன்ன பகுதியை சேர்ந்தவரென விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து 5000 ருபாய் போலி நாணயத்தாள்கள் 44,1000 ரூபாய் நாணயத்தாளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று  நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.