(ஆர்.விதுஷா)

ஹெரண பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்ககப்பட்டுள்ள நிலையில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

 இரு தரப்பினருக்கு இடையில் கருத்து முரண்பாட்டில் ஏற்பட்ட கைகலப்பே இந்த கொலைக்கு காரணம் என பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது குறித்த பகுதிக்கு வருகை தந்த நான்கு பேர் அடங்கிய குழு உயிரிழந்த இளைஞனை கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்கியுள்ளது.

அதனையடுத்து படுகாயமடைந்த இளைஞன் ஹெரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 20 வயதுடைய அரமனாகொல்ல பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹெரண வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.