'பாதாள குழு உறுப்பினர்' கள்ளக்காதலியின் வீட்டில் தற்கொலை.!

Published By: Robert

21 Apr, 2016 | 04:05 PM
image

பொலிஸார் கைது செய்ய முனைந்தபோது, கட்டுநாயக்க சீதுவ பகுதியில் செயற்பட்டு வந்த பாதாள குழு உறுப்பினரான பொடிசாகர இன்று பகல் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கொகரல்ல பொலிஸ் பிரிவில் கும்புக்கெடே, பஹல மெதகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கட்டுநாயக்க, சீதுவ ஆகிய பகுதிகளில் 4 மனித கொலைகள், 2006 ஆம் ஆண்டு கம்பஹா பகுதியில் சிறைச்சாலை பஸ் வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, சிறைச்சாலை பொறுப்பதிகாரி ஒருவர் மீதான துப்பாக்கி பிரயோகம்  உள்ளிட்ட பல குற்றச் சம்பவங்கள் மற்றும் கப்பம் பெறல் போன்ற பல குற்றச் செயல்களில் இவர் ஈடுபட்டிருந்தாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கும்புக்கெடே, பஹல மெதகம பகுதியின் வசிக்கும் தனது கள்ளக்காதலியின் வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, குறித்த வீடு நீர்கொழும்பு சட்டவலுவாக்கள் பிரிவு அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக நேற்று இரவு நேரத்திலிருந்து பொடிசாகர இருந்த வீட்டினை பொலிஸார் நோட்டமிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் தன்னை நோட்டமிடுவதை அறிந்துக்கொண்டுள்ள பொடிசாகர 9.9 மில்லிமீற்றர் நீளமுள்ள துப்பாகியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(க.கமலநாதன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31