மத்திய , சப்ரகமுவ , வடமேல் , மேல் மாகாணங்கள் போன்று அனுராதபுரம் , காலி , மாத்தறை , மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு எதிர்வரும் நான்கரை மணித்தியாலங்களில் 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை கடும் காற்று வீசக்கூடும் என என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதேபோல் , இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடும் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது. 

மின்னல் ஏற்படும் போது திறந்த வௌியில் அல்லது மரத்தடியில் நிற்பதை தவிர்க்குமாறும் , பாதுகாப்பான கட்டடங்களில் அல்லது மூடப்பட்ட வாகனங்களில் இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் , கைப்பேசி மற்றும் மின் உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.