அனுராதபுரம் கல்கடவல பிரதேசத்தில் அமைந்துள்ள திருகன்குளம் வாவியில் நீராட சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

கல்கடவல பிரதேசத்தை சேர்ந்த 5 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று மாலை தனது மூத்த சகோதரி மற்றும் சில குழந்தைகளுடன் நீராட சென்ற போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிழந்த சிறுவனின் சடலம் திருகன்குளம் வாவியில் பிரதேசவாசிகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அனுராதபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.