இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஒருவர்  உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடும் அணியில் வீரர் ஒருவரை சேர்த்துக்கொள்வதற்காக  இலஞ்சம்பெற்றார் என என்ற  செய்தி இணையத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன் இலங்கை கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது

உலக கிண்ண அணியில் குறிப்பிட்ட வீரர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு தெரிவுக்குழு  உறுப்பினர் ஒருவர் வீரரின் போட்டி தொகையிலிருந்து பத்து வீதத்தினை பெற்றுக்கொண்டார் என கிரிக்கெட் ஏஜ் தெரிவித்துள்ளது.

சகலதுறை வீரரான ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டு அந்த வீரரை தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர்  உலக கிண்ண அணியில் சேர்த்துள்ளார் என கிரிக்கெட் ஏஜ் தெரிவித்துள்ளது

குறிப்பி;ட்ட வீரர் இறுதி நிமிடத்திலேயே அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார் எனவும் கிரிக்கெட் ஏஜ் தெரிவித்துள்ளது

 முன்னர் ஊடகங்களிற்கு வெளியிடுவதற்கான தெரிவுக்குழுவினர் தெரிவு செய்திருந்த அணியில் இந்த வீரரின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை மேலும் இவர்  தென்னாபிரிக்காவில் ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணியில் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் கிரிக்கெட் ஏஜ் தெரிவித்துள்ளது.

உலக கிண்ண போட்டிகளிற்கான வீரர்களை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற போட்டிகளிலும் இந்த வீரர் சிறப்பாக விளையாடவில்லை என கிரிக்கெட் ஏஜ் தெரிவித்துள்ளது.