ஒரே நேரத்தில் இரு பெண்களை கர்ப்பமாக்கிய நபரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஜிம்பாப்வேயில் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமான இரண்டு பெண்களை கர்ப்பமாக்கிய நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மங்கிவேர் கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதான டோரோ  இவர் வசிக்கும் வீட்டின் அருகில்  29 வயதான டவானா,  29வயதான  சிபண்டா ஆகிய இரண்டு பெண்கள் வசித்து வந்தனர்.

இருவருக்குமே திருமணமாகிவிட்ட நிலையில், டோரோவுக்கு அந்த இரண்டு பெண்களுடனும் தொடர்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக டவானாவும், சிபண்டாவும் கர்ப்பமானார்கள்.

குறித்த சம்பவம் தற்போது வெளியில் தெரிந்துள்ள நிலையில் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதையடுத்து  டோரோவை மக்கள் பொலிஸில் ஒப்படைத்ததுள்ளனர். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து டோரோ பத்து பசுமாடுகளை அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டது.

அத்தோடு இரண்டு பெண்களின் பிரசவ செலவை அவர் ஏற்க வேண்டும் எனவும், அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு முழு பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.