வீதியவத்தை பகுதியில் 35 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை முச்சக்கரவண்டியில் எடுத்த சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் கடந்த 18 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. 

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 35 இலட்சம் ரூபாவிற்கும் அதிகளவான பணத்தினை  முச்சக்கரவண்டியில் எடுத்து கொண்டு சென்ற இருவரை வீதியவத்தை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைதுசெய்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் பணம் கிடைத்த விதம் தொடர்பில் சரியான விளக்கம் கொடுக்காததுடன், அவர்களின் கருத்துக்களில் முரண்பாடுகள் காணப்பட்டமையால் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவு பிறபித்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.