2019 உலக கிண்ணப்போட்டிகளில் பாக்கிஸ்தான் அணி ஆக்ரோசத்துடன் விளையாடவேண்டும் என  பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  ஆலோசனை வழங்கியுள்ளார்

உலக கிண்ணப்போட்டிகளிற்காக தெரிவு செய்யபட்டுள்ள பாக்கிஸ்தான் அணியினரை சந்தித்தவேளை இம்ரான் கான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்

1992 இல் உலக கிண்ணத்தை கைப்பற்றியமை குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ள இம்ரான் கான்  ஆக்ரோசத்துடனும் துணிச்சலுடனும் விளையாடுவதன் மூலம் மாத்திரமே உலக கிண்ணத்தை கைப்பற்ற முடியும் என தெரிவித்துள்ளார்

1992 இல் நாங்கள் ஆக்ரோசத்துடனும் துணிச்சலுடனும் விளையாடினோம் என தெரிவித்துள்ள இம்ரான்கான் நாங்கள் எப்போதும் எதிரணியின் வி;க்கெட்களை வீழ்த்த முயன்றோம் எனவும் தெரிவித்துள்ளார்

நீங்கள் விக்கெட்களை வீழ்த்தினால் எதிரணியினர் அழுத்தங்களிற்கு உள்ளாவார்கள் அது உங்களிற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

ஒரு அணியாக நாங்கள் விளையாடியதும் 1992 இல் வெற்றிக்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ள இம்ரான் கான் பாக்கிஸ்தான் அணியின் தலைவர் சப்பிராஸ் அகமட்டை திறமையான தலைவர் என வர்ணித்துள்ளதுடன் அவரை அணியை முன்னணியில் நின்று வழிநடத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அணித்தலைவரிற்கு ஒவ்வொரு வீரரினதும் பலமும் பலவீனமும் தெரிந்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ள இம்ரான் கான் சூழ்நிலைக்கு ஏற்ப திறமையை பயன்படுத்துமாறும் ஆலேசனை வழங்கியுள்ளார்

பாக்கிஸ்தான் என்ற பெயரிற்கு பெருமையை பெற்றுத்தாருங்கள் முழு நாட்டிதும் நம்பிக்கை உங்கள் தோளில் உள்ளது எனவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்