கலவெல – தேவவுவ கீஎல பகுதியில் கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர், கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் இளைய சகோதரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் நேற்று காலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே மற்றைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து கொலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள கத்தியொன்றை பொலிஸார் மீட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காணி பிரச்சினை இதற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.