மஸ்கெலியா லக்சபான தோட்டத்தின் லக்சபான பிரிவில் நேற்று நண்பகல் நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக நேற்றிரவு மூன்று குழந்தைகள் உட்பட 37 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் உணவை உட்கொண்டவர்களில் சிலருக்கு வாந்தி, வயிற்று வலியுடன் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி லியத்தப்பிட்டிய தெரிவித்தார்.