கோலி அதிரடி சதம் ; சொந்த மைதானத்தில் கொல்கொத்தாவை வீழ்த்தி திரில் வெற்றிபெற்றது பெங்களூர்

Published By: Priyatharshan

20 Apr, 2019 | 08:51 AM
image

கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் விராட் கோலியின் சதம் கைகொடுக்க, கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் 10 ஓட்டங்களால் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றிபெற்றது.

இதேவேளை, கொல்கொத்தா அணியின் நிதிஷ், ரானா, ரசல் ஆகியோரின் அதிரடி வீணானது.

ஐ.பி.எல். 12 ஆவது தொடரின் 35 ஆவது போட்டியில் தனது சொந்த ஊரில் வைத்து கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸை எதிர்கொண்டது.

இரு அணிகளுக்குமிடையிலான போட்டி நேற்றிரவு 8 மணிக்கு கொல்கொத்தாவின்  ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கொத்தா அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

பெங்களூர் அணியின் ஆரம்பதுடுப்பாட்டடி வீரர்களாக பார்தீவ் பட்டேல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். பார்தீவ் பட்டேல் 11 ஓட்டங்களுடனும் அக்‌ஷ்தீப் நாத் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த மொயீன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொயீன் அலி 28 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ஓட்டங்களுடன் எடுத்து ஆட்டமிழந்தார்.

முதலில் நிதானமாக ஆடிய விராட் கோலி அரைசதம் கடந்ததும் அதிரடியில் இறங்கினார். கடைசி கட்டத்தில் சிக்சர், பவுண்டரியுமாக விளாசினார். விராட் கோலி 56 பந்தில் 4 சிச்கர், 9 பவுண்டரியுடன் சதமடித்து 100 சதமடித்து வெளியேறினார். 

இறுதியில், பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்களைக் குவித்தது.

இதையடுத்து, 214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கிறிஸ் லின், சுனில் நரேன் ஆரம்ப ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

கிறிஸ் லின் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். சுனில் நரேன் 18 ஓட்டங்களுடனும் ஷுப்மான் கில், ரொபின் உத்தப்பா ஆகியோர் 9  ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

நிதிஷ் ரானாவுடன் ஆண்ட்ரு ரசல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பெங்களூர் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. சிக்சர் மழையாக பொழிந்தது.

நிதிஷ் ரானா சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். ஆண்ட்ரு ரசல் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவர் 25 பந்தில் 65 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ரானா 46 பந்தில் 85 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இறுதியில் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203  ஓட்டங்களைப் பெற்று 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இப் போட்டியின் ஆட்ட நாயகனாக பெங்களூர் அணியின் விராட் கோலி தெரிவுசெய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35