இந்தியா, கர்நாடக மாநிலத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவி மதுவின் சடலம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மது என்கிற மாணவி கடந்த 13ம் திகதியிலிருந்து மாயமாகியிருக்கிறார்.

16ம் திகதி கல்லூரியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் இவரது உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தேர்வில் குறைவான புள்ளிகளை பெற்றதால் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் பொலிஸார் இது, தற்கொலை என்ற முடிவிற்கு வந்துள்ளனர். ஆனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மது பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டாயத்தின் பேரில் கடிதம் எழுதி வாங்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மதுவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அறிக்கை வந்த பின்னரே அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலை செய்யப்பட்ட மதுவும், சுதர்ஷன் யாதவ் என்ற இளைஞனும் காதலித்து வந்ததாக சக கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர், அதுமட்டுமின்றி, சுதர்ஷனின் தந்தைக்கு சொந்தமான நிலத்தில் மதுவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.