கஞ்சிபானை  இம்ரானின் மச்சினனின் மகன் சி.சி.டி.யால் கைது 

Published By: Digital Desk 4

19 Apr, 2019 | 06:34 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

 கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் பாதாள உலக தலைவன் கஞ்சிபானை இம்ரானின், மச்சினனின் மகனை  மேலதிக விசாரணைகளுக்காக  கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்..

தெமட்டகொடையைச் சேர்ந்த 50 வயதான பியல் புஷ்பகுமார மற்றும் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த கஞிபானை இம்ரானின் மச்சினனின் மகனான 22 வயதான மொஹமட் அப்ரிடி மொஹமட் இன்ஹாம் ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.  

அவர்களிடம் கட்டுநாயக்க விமான நிலைய சி.ஐ.டி. அதிகாரிகளும் தேசிய உளவுத்துறையின் அதிகரைகளும் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், மொஹம்மட் அப்ரிடி மொஹம்மட் இன்ஹாம் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்ப்ட்டுள்ளார். 

எனினும் 50 வயதான பியல் புஷ்பகுமார விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

 நேற்று அதிகாலை 5.50 மணியளவில் டுபாயிலிருந்து வந்த யூ.எல்.226 எனும் விமானத்தில் இவர்கள் நாடுகடத்தப்ப்ட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அந்த இருவரையும் சி.ஐ.டி.யினர்  பொறுப்பேற்று விசாரித்து வந்தனர்.  

இந்நிலையில் இதுவரை டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 31 பேரில் 23 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09