விண்ணுக்கு ஏவப்பட்ட இலங்கை செய்மதி; விண்வெளி மையத்தை சென்றடைந்தது

Published By: Daya

19 Apr, 2019 | 05:32 PM
image

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி மையத்தை இன்று சென்றடைந்தது.

நேற்று அதிகாலை 2.16 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட குறித்த செய்மதி இன்று விண்வெளி மையத்தை சென்றடைந்தது.

இந்தச் செய்மதியானது, எதிர்வரும் மே அல்லது ஜுன் மாதமளவில் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

அமெரிக்காவின் – வெர்ஜினியா பிராந்தியத்திலிருந்து நாசா விண்வெளி நிறுவனத்தின் ஏவூர்திப் பொறியின் மூலம், புவியிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கே இந்த செய்மதி கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

ஜப்பானின் கியூ பல்கலைக்ககத்தின் பர்டிஸ் என்ற விசேட திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ஆயிரம் கனசென்றிமீற்றர் நீளமுடைய இராவணா – 1 செய்மதியானது, 1.1 கிலோ கிராம் நிறைகொண்டதாகும்.

ஆர்த்தர் சீ.க்ளாக் மையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய, இந்த செய்மதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கு இராவணா- 1 என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு எடுத்துக்கூறும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த செய்மதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் பின்னர், இலங்கையையும் அதனைச் சூழவுள்ள வலையத்தையும் நிழற்படம் எடுத்தல் உள்ளிட்ட 5 செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26