அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக ரி. ரி.  வி. தினகரன் தெரிவு செய்யப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக  சி. ஆர்.சரஸ்வதி தெரிவித்ததாவது,

“சென்னையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுச்செயலாளராக ரி. ரி. வி. தினகரன் ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்டார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவராக தெரிவு செய்யப்படுவார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக பதிவு செய்யும் வேலைகள் நடைபெற்று வருகிறது.” என்றார்.

முன்னதாக நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ரி. ரி. வி. தினகரன் முடிவு எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.