(நா.தினுஷா)
சஜித் - ரவி தகராறு மோதல்கள் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் தாக்கம் செலுத்தாது. ஆனால் எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும். அத்தோடு இருவருக்குமிடையிலான முரண்பாடுகளை அவர்களே திர்த்துக்கொள்ள வேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.
இருப்பினும் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் உப தலைவர் ரவி கருணாயக்கவுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அண்மைய காலங்களில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாறிமாறி குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளோம். எதிர்வரும் நாட்களில் இந்த பிரச்சினைக்கு அவர் தீர்வை வழங்குவார் .
பொதுஜன முன்னணியினரிடையே காணப்படும் குடும்பப் பிரச்சினைகள் எமது கட்சியில் கிடையாது. தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு இடமளிக்கப் போவதும் இல்லை. சஜித்துக்கும், ரவிக்கும் இடையிலான மோதல்களுக்கு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரைவில் தீர்வை வழங்குவார்.
ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் விடயத்தில் கட்சிக்குள் முரண்பாடுகள் எதுவும் கிடையாது. தனிபட்ட பிரச்சினைகளை காரணங்காட்டி வேட்பாளரை தெரிவு செய்வதில் எங்களுக்குள் பிளவு ஏற்படாது. உரிய நேரத்தில் சரியான ஒருவரை வேட்பாளராக அறிவிப்போம். வேட்பாளர் விடயத்தில் கட்சி உறுப்பினர்களிடைய கருத்து முரணபாடுகள் ஏற்படப் போவதில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் ஏற்பட்டுள்ள குடும்பப் பிரச்சினை போன்று ஐக்கிய தேசிய கட்சியில் எதுவும் கிடையாது. உறுப்பினர்களிடையே முரண்பாடுகள் காணப்பட்டாலும் அதனை தீர்ப்பதற்கான சிறந்த தலைமைத்துவம் எமது கட்சியில் உள்ளது. அவ்வாறு கட்சிக்குள் தனிப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுமாயின் அதற்கு இடமளிக்க போவதுமில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM