கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் நேற்று மோட்டார் சைக்கிள் மோதியதில் லனுவில பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

தன்கொடுவ நாத்தான்டிய வீதி கினிகல்போல பிரதேசத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்று கொண்டிருந்தவர் மீது மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விபத்தை ஏற்படுத்திய மோட்டார் வண்டியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே போன்று ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கொழும்பு - அவிசாவளை பழைய வீதியில், அவிசாவளை நோக்கி சென்றுகொண்டிருந்த காரொன்று பாதையை கடக்கமுற்பட்ட ஒருவர் மீது மோதியதில் படுகாயமடைந்த குறித்த பாதசாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அலுபோதல கொஸ்கமவைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய கார் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.