மஹி­யங்­கனை தேசிய பாட­சா­லைக்கு முன்னால் நேற்று முன்­தினம் அதி­காலை இடம்­பெற்ற கோர விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி வாக்­கு­மூலம் ஒன்றை வழங்­கி­யுள்ளார்.

திரு­கோ­ண­ம­லையில் இருந்து தியத்­த­லாவை நோக்கிப் பய­ணித்த தனியார் பஸ் மற்றும் மட்­டக்­க­ளப்பு நோக்கிப் பய­ணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி­ய­மை­யால் இவ்விபத்து நிகழ்ந்­தது.

இந்த விபத்தில் வேனில் பய­ணித்த 10 பேர் உயி­ரி­ழந்த நிலையில் இருவர் படு­கா­ய­ம­டைந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

கொழும்பில் உற­வி­னர்­களைப் பார்க்கச் சென்ற இந்தக் குடும்­பத்­தினர், நுவ­ரெ­லியா பிர­தே­சத்­துக்கு சுற்­றுலாப் பயணம் மேற்­கொண்­டுள்­ளனர். பின்னர் அங்­கி­ருந்து மட்­டக்­க­ளப்­பிற்குச் செல்லும் போது அவர்கள் இக்கோர விபத்­திற்கு முகம் கொடுத்­துள்­ளனர்.

சம்­பவம் தொடர்பில் சாரதி வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில்,

“நான் அதி­காலை 1.15 மணி­ய­ளவில் மஹி­யங்­கனை நகரிலுள்ள உண­வகம் ஒன் றில் பஸ்ஸை நிறுத்­தினேன். அங்கு தேநீர் அருந்­திய பின்னர் மீண்டும் பய­ணத்தை ஆரம்­பித்தேன். பய­ணத்தை ஆரம்­பித்து ஒரு சில நிமி­டங்­களில் அதிக வேகத்­துடன் பிழை­யான பகு­தியில் வேன் ஒன்று வரு­வ­தனை நான் அவ­தா­னித்தேன்.

நான் முடிந்தளவு ஓரத்­துக்கு பஸ்ஸை நகர்த்திக் கொண்டு சென்றேன். எனினும் அந்த வேன் தனது வேகத்தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் நெருங்­கி­ வந்­தது.

நொடிப்­பொ­ழுதில் இடி விழுந்­த­தைப் போன்று இந்த வேன் மோதியது. நான் எவ்வளவு முயற்சித்தும் அதனைத் தடுக்க முடியவில்லை என மஹி­யங்­க­னையில் விபத்­துக்­குள்­ளான தனியார் பஸ் சாரதி குறிப்பிட்டுள்ளார்.