சிறைச்சாலைக்குள் கைதிகள் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புகளை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது காணப்படும் சமிஞ்சை கட்டமைப்பில் சிறிய கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் தொலைபேசி அழைப்புகளை காட்டிக் கொடுப்பதற்கான சமிஞ்சை உபகரணங்களை சிறைக் கூடங்களில் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.