எம்மில் பலருக்கு அடிபட்டாலோ அல்லது வேறு ஏதேனும் வகையில் விபத்து ஏற்பட்டாலோ உடலிலிருந்து வெளியாகும் இரத்தமானது, சில நிமிடங்களிலேயே உறைந்துவிடும். இப்படி உறைவது ஒரு வகையில் ஆரோக்கியமானது என வைத்தியர் அனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சிலருக்கு ரத்தம் உறையாமல் தொடர்ந்து உடலிலிருந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். இவர்கள் இரத்தம் உறையாமை என்ற பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். தற்போது இதற்கும் நவீன முறையிலான சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது.

உலக அளவில் 5000 ஆண்களுக்கு ஒரு ஆண் இத்தகைய இரத்தம் உறையாமை பிரச்சினைக்கு ஆளாகுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. அத்துடன் இத்தகைய பாதிப்பு ஏ, பி, சி என மூன்று வகையினதாகவும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

கடுமையான தலைவலி, தொடர்ச்சியாக வாந்தி, கழுத்து வலி,பார்வைத் திறனில் மாறுபாடு குறிப்பாக ஒரு பொருள் இரண்டிரண்டாக தெரிவது அல்லது மங்கலாகத் தெரிவது,  நீண்ட தூக்கம், அடிபட்ட இடங்களிலிருந்து தொடர்ச்சியான இரத்தப்போக்கு ஆகியவற்றை இதன் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.

ஹீமோபிலியா எனப்படும் இரத்தம் உறையாமை பிரச்சினையில், ஏ மற்றும் பி என இரண்டு வகை பாதிப்புகளுக்கு, ரிப்ளேஸ்மென்ட் தெரபி எனப்படும் சிகிச்சை மிகுந்த பலனளிக்கிறது. இந்த முறையில் இரத்தத்திலிருந்து, ஹீமோபிலியா போன்ற இரத்தம் உறைய வைக்கக்கூடிய காரணிகளை தனியாக பிரித்து எடுத்து, மீண்டும் நரம்பு வழியாக இரத்தத்தில் செலுத்துவார்கள். இது முழுமையான நிவாரணத்தை தருகிறது.

அதே தருணத்தில் உடலில் காயங்கள் ஏற்படாத அளவுக்கு நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அத்துடன் பற்களில் எந்த வகையான ரத்த கசிவு ஏற்படாமல், பற்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். வலிநிவாரணிகளை மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த மூன்றையும் முறையாகப் பின்பற்றினால் ரத்தம் உறையாமை என்ற பாதிப்பிலிருந்து விடுபடலாம்.