பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள பழைமைவாய்ந்த நோட்ரே டோம் என அழைக்கப்படும் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது மிகச் சிறப்பாக செயல்பட்டு சேதங்களைக் குறைத்த தீயணைப்பு வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

இதேவேளை பாரிஸ் நகர சிட்டி ஹாலில் வீரர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி கூறும் பிரம்மாண்டமான பதாகைகள் தொங்கவிடப்பட்டன.

பிரான்ஸ் அதிபர் மாளிகையில், அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த நாட்டு இராணுவத்தின் அங்கமாகத் திகழும் தீயணைப்புப் படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகளும், வீரர்களும் கலந்து கொண்டனர்.