12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள தென்னாபிரிக்க அணி வீரர்கள் 15 பேர் கொண்ட குழாமை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, உலகக் கிண்ண தொடரில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய 10 நாடுகள் இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கின்றன.
ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வேண்டும்.
இதேவேளை, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, பங்களாதேஷ் இலங்கை ஆகிய அணிகள் தமது 15 பேரடங்கிய வீரர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது, போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தங்களது வீரர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளன.
உலகக் கிண்ண போட்டிக்கு முன்பாக உடல் தகுதியை எட்டி விடுவார் என்ற நம்பிக்கையில் காயம் அடைந்துள்ள தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்டி தென்னாபிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காவிட்டாலும் ஹசிம் அம்லா அனுபவத்தின் அடிப்படையில் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேரடங்கிய வீரர்களின் விபரம் வருமாறு,
தென்னாபிரிக்க அணியை பாப் டுபிளிஸ்சிஸ் தலைமையேற்று வழிநடத்துகின்றார். அவருடன் ஹசிம் அம்லா, டுமினி, டேவிட் மில்லர், ஸ்டெயின், பெலக்வாயோ, இம்ரான் தாஹிர், ரபடா, பிரிட்டோரியஸ், குயின்டான் டி கொக், ஆன்ரிச் நோர்ட்டி, லுங்கி நிகிடி, மார்க்ராம், வான்டெர் துஸ்சென், தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, மீதமாக ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய நாடுகள் தமது உலகக் கிண்ண குழாமை அறிவிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM